பல்வேறு சலுகைகளுடன் தச்சு தொழிலாளிகளுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

‌ஷார்ஜா, துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய 10-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சிபெற்ற, 3 முதல் 5 வருட பணி அனுபவமுடைய, 35 வயதுக்குட்பட்ட தச்சு தொழிலாளிகளுக்கு(கார்ப்பெண்டர்கள்) அதிகளவில் வேலைவாய்ப்பு உள்ளது.


 


 

மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை (அனுபவத்துக்கேற்ப) வழங்குவதுடன் இருப்பிடம், விசா, மருத்துவச்சலுகை மற்றும் அந்நாடுகளின் சட்டதிட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

 

மேலும் ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 முதல் 40 வயதுக்குட்பட்ட கொத்தனார், கார்ப்பெண்டர்கள், பிளம்பர், பெயிண்டர்கள், ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களும் தேவை. இவர்களுக்கும் மேற்கண்ட சலுகைகள் உண்டு.

 

தகுதியுடையவர்கள் தங்களது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq80@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032’, என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கவேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற வலைத்தளத்தையோ, 044-22505886, 22502267 மற்றும் 8220634389 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில்சொர்க்கால்பேட்டை பொது மக்கள் வறுமையில் வீதியில். அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. April 27, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் •
Image
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கியில் தற்போது ரத்தம் இல்லாத காரணத்தால் திருவண்ணாமலை ரத்தம் அளித்த அரசு கல்லூரி மாணவர்கள்
Image
தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு: சவரன் ரூ.32,640-க்கு விற்பனை
Image
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image